தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் பொதுமக்களுக்கு காலண்டர் வழங்கினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் மூலம் தங்களது பகுதிக்குட்பட்டவர்களுக்கு 2023ம் ஆண்டு காலண்டர் விநியோகம் செய்ய தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமாரிடம் வழங்கப்பட்டது. அதேபோல் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா சார்பிலும் காலண்டர் வழங்கப்பட்டது.
இதையடுத்து மாப்பிள்ளையூரணி பகுதியில் வசிக்கும் சமூக நல அமைப்புகள், திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காலண்டர் விநியோகத்தை, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமான சரவணக்குமார் வழங்கி துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஸ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், கிளைச் செயலாளர்கள் காமராஜ், பாலுநரேன், முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் கௌதம் உட்பட ஒன்றியத்திற்குட்பட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.