வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப்பதிவில், சுயமரியாதையையும் உரிமையையும் விட்டுக்கொடுக்காமல், ஆதிக்கத்தையும் அடிமை வாழ்வையும் எதிர்த்து நின்று, தென்னகத்தின் வீரத்தைப் பறைசாற்றிய பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்து வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளில் அவருக்கு எம் வீரவணக்கம்! என்று பதிவிட்டுள்ளார்.