• vilasalnews@gmail.com

மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நலத்திட்ட உதவி : கடம்பூர் ராஜு எம்எல்ஏ வழங்கினாா்!

  • Share on

விளாத்திகுளம் அருகே துலுக்கன்குளம் கிராமத்தில் மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ வழங்கினாா்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவுடைதங்கம் (75). மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே மனைவி இறந்து விட்டார். ஆவுடைதங்கத்தின் தங்கை பத்மாவதி (65).இவருக்கும் திருமணமான சில ஆண்டுகளிலே கணவன் இறந்து விட்டார். இதன் காரணமாக மாற்றுத்திறனாளி அண்ணன் ஆவுடையதங்கம் தனது விதவை தங்கை பத்மாவதியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளார். 

பத்மாவதி கூலி வேலைக்கு செய்து வரும் பணத்தில் இருவரும் அன்றாட வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். தற்போது பத்மாவதிக்கும் வயது முதிர்வின் காரணமாக வேலை செய்ய முடியவில்லை. இதனால் ஆவுடைதங்கத்தின் முதியோர் உதவித் தொகை ரூ.1000 வைத்துக் கொண்டு அண்ணன் தங்கை இருவரும் வறுமையில் வாழ்ந்து வந்துள்ளனர். 

இதுதொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் பரவியதை தொடா்ந்து விளாத்திகுளம் தொகுதி அதிமுக சார்பில் ஆவுடைத் தங்கம், பத்மாவதி ஆகியோருக்கு புத்தாடைகள், காலணிகள் மற்றும் உணவுப் பொருட்களை கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜ குமார், விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பால்ராஜ், ஜெ.பேரவை குட்லக் செல்வராஜ், நகரச் செயலாளர் மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட ஸ்மாட்சிட்டி பழைய பேருந்து நிலையம் மார்ச் மாதம் திறக்கப்படும் - அமைச்சர் நேரு ஆய்வுக்குப் பின் பேட்டி

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ மரியாதை!

  • Share on