ஆறுமுகநேரியில் தொண்டு நிறுவன உரிமையாளரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்த நிலையில், தற்போது 3 சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி, பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் பாலகுமரேசன் (45), ஆதவா அறக்கட்டளை நிறுவனரான இவர் அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஒரிரு தினங்களுக்கு முன்பு, ஹோட்டலில் இருந்தபோது 7 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றது. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, 7 பேர் கொண்ட கும்பலை தேடி வந்த நிலையில், தற்போது 3 சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.