2023ம் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சிலுவைபட்டியில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாவட்ட துணை செயலாளர் அந்தோணி சேவியர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் முன்னிலை வகித்தார், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் கட்சி கொடியேற்ற, மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் அந்தோணி பிச்சை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ்குமார், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், மில்லை தேவராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், மாவட்ட பிரதிநிதி பழனிவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சகாயராஜ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் அகஸ்டின், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் விக்ரம், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாநகர அவைத்தலைவர் மதியழகன், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் ஜெயசிங், இளைஞர் அணி செயலாளர் மிக்கேல்ராஜ், சிலுவைப்பட்டி கிளை நிர்வாகிகள் ஜோசப், தொம்மைராஜ், கனி, ராம்குமார், பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.