ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. புத்தாண்டில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் குவிந்தனர். மேலும், திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வேல் குத்தியும், காவடி மற்றும் பால்குடம் எடுத்தும் வந்தனர். பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.