பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு தூத்துக்குடியில் பாஜகவினர் அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட அலுவலகத்தின் முன்பாக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தபட்டது.
இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பால்ராஜ், சிறுபான்மையினர் பிரிவு மாநில செயலாளர் அசோகன், மாவட்ட துணைத் தலைவர்கள் வாரியார் சுவைதர், மாவட்டச் செயலாளர் வீரமணி, மற்றும் நிர்வாகிகள் வெங்கடேஷ், காளிராஜா, ஓம் பிரபு, மணிகண்டன், விஜயன், சுரேஷ்குமார், சேர்ம குருமூர்த்தி, மண்டல் தலைவர் ராஜேஷ் கனி, ஜெயக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் எஸ்டிஆர் விஜயசீலன் உட்பட பலர் கலந்து கொண்டு மெளன அஞ்சலி செலுத்தினர்.