• vilasalnews@gmail.com

போதை கடத்தல் கும்பல் தலைவனுக்கு இரண்டு ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on

தூத்துக்குடியில் இருந்து எவ்வித உரிய ஆவணமின்றி சட்டவிரோதமாக இலங்கைக்கு படகுமூலம் தப்ப முயன்ற வழக்கில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல போதை போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் ஜோனாதன் தோர்ன் என்பவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி குபேர சுந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் லிட்டில் ஹாம்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபல போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவர் ஜோனதன் ஜோர்ன்.

இவர் மீது ஏற்கனவே மும்பையில் போதை மருந்து தொழிற்சாலை நடத்தியதாக மத்திய வருவாய் புலனாய் துரையினர் ரூபாய் 40 கோடி மதிப்பிலான கேட்டமைன் உள்ளிட்ட போதை மருந்து பொருட்களுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்த ஜோனதன் ஜோர்ன் தூத்துக்குடிக்கு வந்து உரிய ஆவணம் எதுவும் இன்றி படகு மூலம் இலங்கைக்கு கடந்த 10- 6 -2021 ஆம் ஆண்டு தப்ப முயன்றுள்ளார். இந்த தகவல் கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவிற்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து விஜய அனிதா தலைமையிலான கியூ பிரிவு போலீசார் இலங்கைக்கு தப்ப முயன்ற ஜோனதனை உடனடியாக கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி குபேர சுந்தர் உரிய ஆவணம் இன்றி இலங்கைக்கு படகு மூலம் தப்ப முயன்ற பிரபல போதை கடத்தல் கும்பல் தலைவன் ஜோனதனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார்.

  • Share on

கஞ்சாவிற்கு எதிராக போராட்டம் : அறக்கட்டளை நிறுவனருக்கு அரிவாள் வெட்டு!

தூத்துக்குடியில் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு பாஜகவினர் அஞ்சலி

  • Share on