• vilasalnews@gmail.com

கஞ்சாவிற்கு எதிராக போராட்டம் : அறக்கட்டளை நிறுவனருக்கு அரிவாள் வெட்டு!

  • Share on

ஆறுமுகநேரியில் தொண்டு நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது கணக்காளரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து அவர்களை தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி, பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் பாலகுமரேசன் (45), ஆதவா அறக்கட்டளை நிறுவனரான இவர் நேற்று ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்த போது நேற்று 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளது. 

இதனை தடுக்க முயன்ற அவரது கணக்காளர் ராஜமணியா புரத்தைச் சேர்ந்த மூக்கன் மகன் ராஜமாணிக்கம் (25) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த  பாலகுமரேசன் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவ மனையிலும், கணக்காளர் ராஜமாணிக்கம் காயல்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் செந்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார். 

ஆறுமுகநேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், சட்டவிரோத கஞ்சா கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாலகுமரேசன் தலைமையில் போராட்டம் நடந்தது. இதன் எதிரொலியாக அவர் மீது மர்ம நபர்கள் கொலவெறி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜமணியா புரத்தைச் சேர்ந்த சூசைராஜ் மகன்கள் பிரதீப், பிரவீன், திலகர் மகன் அலெக்ஸ் ரூபன், பாப்பையா மகன் அருண் உட்பட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

  • Share on

தூத்துக்குடியில் அதிகாலையில் கார் எரிந்து சேதம் : போலீசார் விசாரணை

போதை கடத்தல் கும்பல் தலைவனுக்கு இரண்டு ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on