தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் ஆருத்ரா தரிசன பூஜைகளை முன்னிட்டு, ரதவீதி சுற்றிவர அனுமதி வழங்கிட வேண்டி இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :
தூத்துக்குடி மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் வருகின்ற 30ந் தேதி அன்று ஆருத்ர தரிசன பூஜைகள் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் வருடந்தோறும் ஸ்ரீ நடராஜர் விஸ்ரகம் ரதவீதி சுற்றி வருவது வழக்கம், அதுபோல இந்த வருடமும் சுவாமி ரதவீதி சுற்றிவர அனுமதி அளித்திட வேண்டுகிறோம் என்றும்,
தமிழகம் முழுவதும் பெரும்பாலான திருக்கோவில்களில் சுவாமி ரதவீதிக்கும், தேரோட்டத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பிற மத சடங்குகளானா தேர்பவனி திருவிழா அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கிய அரசு, நூற்றுக்கும் குறைவாகவே பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த நடராஜரின் ரதவீதி விழாவிற்கு அனுமதி வழங்கிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிகழ்வின் போது, மாநில துணை தலைவர் குணசீலன், மாவட்ட துணை தலைவர் சுந்தர், ராமசுப்பு , மாவட்ட இளைஞரணி தலைவர் அழகுராஜா, மாவட்ட செயலாளர் மைனர் பாண்டி உள்ளிட்ட இந்து மக்கள் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.