• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மக்கள் பொங்கல் திருநாளை கொண்டாட பொழுது போக்கு இடங்கள் தயார் : மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்!

  • Share on




தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில், அதிமுக எதிர்கட்சி கொறடாவும் வழக்கறிஞருமான மந்திரமூர்த்தி பேசுகையில்

கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதாக தகவல் வருகிறது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவைகள் என்ன நிலையில் இருக்கிறது. அதன் நிலை குறித்து மேயர் ஆய்வு மேற்கொண்டு, மக்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்பட்டுள்ளதா என கேட்டார். 

அவரது கேள்விக்கு பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி,  மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தயார் நிலையில் உள்ளன. சுகாதார அதிகாரிகளும், மக்கள் நலன் கருதி விழிப்புணர்வோடு பணியாற்றி வருகின்றனர் என தெரிவித்தார்.

தொடர்ந்து, மாமன்ற உறுப்பினர் மகேஸ்வரி, பொண்ணப்பன், அந்தோணி பிரகாஷ் மார்ஷல், சுப்புலெட்சுமி, வைதேகி, இசக்கிராஜா, ராமுத்தம்மாள், சந்திரபோஸ் உள்ளிட்டோர் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாமன்ற கூட்டத்தில் பேசினார். அவர்களுக்கு உரிய பதிலையும், விளக்கத்தையும் மேயர் ஜெகன் பெரியசாமி அளித்தார்.

அதனையடுத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: 

மாநகராட்சி பகுதிகளில் 4500 சாலைகள் உள்ளன. அதில் எது முக்கியமானது என்று கருதி முதல் கட்ட பணிகள் ஜனவரி பிறந்ததும் 60 வார்டு பகுதிகளிலும், புதிய தார் சாலை அமைக்கப்படும். கால்வாய்கள் பல பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன. பக்கிள் கால்வாய் இருந்தாலும், புதிய கால்வாய் தேவை என்கிற பட்சத்தில் திட்டம் நிறைவேற்றப்படும். 

பொங்கல் திருநாளை பொதுமக்கள் பொழுதுபோக்கு அம்சத்துடன் கொண்டாடுவதற்கு பூங்காக்கள் சீர்செய்யப்பட்டு திறந்து வைக்கப்படும். அனைத்து பணிகளையும் முழுமையாக எல்லா பகுதிகளுக்கும் செய்து கொடுக்கப்படும் என்றார். 

கூட்டத்தில், மாநகராட்சிக்குட்பட்ட பாண்டுரங்கன் தெருவில் உள்ள நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு போதிய இடம் இல்லாததால் சத்திரம் தெரு, அம்மா உணவகம் பின்புறம் உள்ள மாநகராட்சி இடத்தில் கட்டிடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. பழைய பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்த கூட்டத்தில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், சுரேஷ்குமார், ஜெபஸ்டின் சுதா, ராஜதுரை, பட்சிராஜ், விஜயகுமார், சரண்யா, சோமசுந்தரி, மரியகீதா, நாகேஸ்வரி, கண்ணன், பொன்னப்பன், சரவணக்குமார், முத்துவேல், பவானி மார்ஷல், ரெக்ஸின் சூசை, மெட்டில்டா, காந்திமணி, ராஜேந்திரன், ஜாக்குலின்ஜெயா, தனலட்சுமி, தெய்வேந்திரன், சுயம்பு, ரெங்கசாமி, ஜான், ஜாண்;சிராணி, அதிர்ஷ்டமணி, ஜெயசீலி, ரிக்டா, பேபி ஏஞ்சலின், சுப்புலட்சுமி, விஜயலட்சுமி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் எடின்டா, கற்பக கனி, கம்யூனிஸ்ட் கவுன்சிலர் முத்துமாரி, அதிமுக கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், பத்மாவதி, செயற்பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், திட்டம் ரெங்கநாதன், உதவி ஆணையர்கள் காந்திமதி, சேகர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தில் ஆதார் எண் இணைக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.70 கோடி கடன் உதவி!

  • Share on