பராமரிப்பு உதவித் தொகை பெற்றுவரும் மாற்றுத்திறனாளிகள் தங்களது ஆதார் எண், தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:-
"தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் சுமார் 6,554 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்தோறும் ரூ.2000 அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தபட்டு வருகிறது. தற்போது பராமரிப்பு உதவித் தொகை பெற்றுவரும் மாற்றுத் திறனாளிகளின் முழு விபரம் டிஜிட்டல் மயமாக்கப்படு வருகிறது.
எனவே, ரூ.2000 பெறும் மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் குணமடைந்தோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், நாள்பட்ட நரம்பியல் குறைபாடுடையோர் மற்றும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஆதார் எண், தேசிய அடையாள அட்டை மற்றும் வங்கி புத்தக நகல் விவரங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.