• vilasalnews@gmail.com

டி.சவேரியார்புரத்தில் மீன்சந்தை கட்டும்பணியை - ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்!

  • Share on

மாப்பிள்ளையூரணி ஊராட்சி, டி.சவேரியார்புரத்தில் மீன்சந்தை கட்டும் பணிக்கான அடிக்கல்நாட்டு விழாவில், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் கலந்து கொண்டு அடிக்கல் நட்டி பணியை தொடங்கி வைத்தார்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மீனவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அவர்கள் நீண்டநாளாக  மீன்சந்தை வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த மீன்சந்தை அமைக்கப்படுகிறது. கட்டுமான பணிகள் முடிந்து மீன்சந்தை இயங்கும் நேரத்தில் தூய்மையை கடைபிடித்து சுகாதாரத்தை பேணிபாதுகாத்து நல்லமுறையில் பயன்னடைய வேண்டும் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராணி, பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலிக்ஸ், சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், திமுக நிர்வாகிகள் ராயப்பன், பொன்னுச்சாமி, ராமச்சந்திரன், கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

வியாபாரிகளுக்கு தொழில்கடன் - கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சரவணக்குமார் வழங்கினார்!

தூத்துக்குடியில் திருமண ஆசைகாட்டி சிறுமி பாலியல் பலாத்காரம் : இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி மீது புகார்

  • Share on