வியாபாரிகளுக்கு தொழில்கடன் வழங்கும் நிகழ்ச்சியில், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சரவணக்குமார் கலந்து கொண்டு கடன் உதவிகளை வழங்கினார்.
மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன்சங்கம் சார்பில் தொழில்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன்சங்க தலைவர் சரவணக்குமார், தாளமுத்துநகர், மாப்பிள்ளையூரணி பகுதி வியாபாரிகள் 20 பேருக்கு 15லட்சம் தொழில்கடன் வழங்கினார்.
அதனையடுத்து அவர் பேசுகையில்:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் படி, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி இந்த தொழில்கடன் வழங்கப்படுகிறது. கூட்டுறவே நாட்டுயர்வு என்ற கோட்பாடிற்கிணங்க இந்தியா உள்ளிட்ட தமிழக வளர்ச்சியில் முதுகெலும்பாக விளங்கக்கூடிய கிராமப்புற பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு விவசாயம் பாதுகாக்கப்படுகிறது. அதே போல் சிறுகுறு நடுத்தர வியாபாரிகளுக்கு தொழில்கடன் வழங்கி அவர்களது வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு தமிழக அரசு இதுபோன்ற கடன்களை வழங்கி ஊக்குவிக்கிறது.
தொழில்புரிவோர் நல்ல முறையில் வங்கியில் வாங்கிய கடன் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் முறையாக செலுத்தி அடுத்த முறை கூடுதலாக கடன்தொகை பெற்றுக்கொள்வதற்கான வழிவகையை கையாள வேண்டும். எல்லோருடைய தொழிலும் நல்ல முறையில் நடைபெற வேண்டும். என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலரும் கூட்டுறவு கடன் சங்க இயக்குனருமான அந்தோணி தனுஷ்பாலன், திமுக கிளைச்செயலாளரும் கூட்டுறவு கடன் சங்க இயக்குனருமான காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் தொம்மைசேவியர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மாப்பிள்ளையூரணி கிழக்கு பகுதி வடக்கு சோட்டையன்தோப்பு ஆ.சண்முகபுரம் மேல்பகுதி சுற்றுவட்டார வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் பெரியசாமி, தாளமுத்துநகர் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்கனி, நலச்சங்க கௌரவ ஆலோசகர், அந்தோணி சௌந்தர்ராஜன், திமுக ஒன்றிய துணைச்செயலாளர் ராமசந்திரன், மற்றும் கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.