• vilasalnews@gmail.com

புகையிலை பொருட்களை பதுக்கல் : 4 பேர் கைது... 61 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!

  • Share on

ஆத்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 4 பேரை  கைது செய்ய போலீசார், அவர்களிடமிருந்து, ரூபாய் 1,08,200 மதிப்புள்ள 61 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ரூபாய் 53,200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் மேற்பார்வையில் ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (26.12.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது தெற்கு ஆத்தூர் பகுதியில் உள்ள ஒரு குடோன் முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கொற்கை மணலூர்  பகுதியை சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மகன்களான ஜெயமுருகன் (41), மாரிமுத்து (39), பொன்ராஜ் (35) மற்றும் ஏரல் முதலியார் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கணேசன் (46) ஆகியோர் என்பதும் அவர்கள் மேற்படி குடோனில் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரிகளான ஜெயமுருகன், மாரிமுத்து, பொன்ராஜ் மற்றும் கணேசன் ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 1,08,200 மதிப்புள்ள 61 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ரூபாய் 53,200யும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

ஆத்தூரில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 ரவுடிகள் கைது!

வியாபாரிகளுக்கு தொழில்கடன் - கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சரவணக்குமார் வழங்கினார்!

  • Share on