தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ உடன், எட்டயபுரம் நகரச் செயலாளர் ராஜ குமார் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்.
எட்டயபுரம் நகர அதிமுக செயலாளர் ராஜ குமார், தன்னுடைய மகள் ஜோஷிகா பிறந்த நாளை முன்னிட்டு, இன்று ( 25-12-2022 ) முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ இல்லத்தில் வைத்து அவருடன் உடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.
இந்நிகழ்ச்சியில், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் நீலகண்டன், கோபி, முருகன், கேண்டீன் நைனா சிவா, ரவி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.