• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே போட்டியில் காயமடைந்த கபடி வீரருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் நேரில் சென்று ஆறுதல்!

  • Share on

கபடி போட்டியில் காயமடைந்த கபடி வீரருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சவேரியார்புரம் பகுதி கபடி குழுவைச் சேர்ந்த கபடி வீரர் ஜென்சன் என்பவர், கபடி போட்டியொன்றில் விளையாடும் போது எதிர்பாராத விதமாக வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு காயமடைந்து, தற்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். 

இது குறித்து தகவல் அறிந்த மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் சரவணக்குமார், கபடி வீரர் ஜென்சன் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். 

அப்போது சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வில்சன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த குமார், கௌதம் மற்றும் சவேரியார்புரம் ஊர் இளைஞரணியினர், கபடி வீரர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி!

மகள் பிறந்தநாள் : கடம்பூர் ராஜூ எம்எல்ஏவுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்!

  • Share on