தூத்துக்குடியை அடுத்த புதூர் பாண்டியாபுரம் டோல் கேட் அருகே முன்னாள் சென்ற லாரி மீது பைக் மோதியத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரி தாபமாக இறந்தார்.
தூத்துக்குடி- மதுரை 4 வழிச்சாலையில் புதூர் பாண்டியபுரம் டோல் கேட் அருகே நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியில் இருந்து எட்டயபுரம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் எப்போதும் வென்றானைச் சேர்ந்த பாண்டியராஜன் (39) என்பவர் ஓட்டிவந்த பைக் எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து பற்றி புதியமுத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரனனை நடத்தி வரு கின்றனர்.