எட்டயபுரத்தில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான மறைந்த எம்ஜிஆரின் 35வது நினைவு தினத்தையொட்டி எட்டயபுரத்தில் நடுவிற்பட்டி அலங்காரி அம்மன் கோவில் தெருவில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மகளிர் அணி செல்வி சாந்தி, அவை தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, சொக்கன், கன்னியப்பன், மோகன், அம்மா மடம் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.