• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கக்கன் நினைவு தினம் - மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மரியாதை!

  • Share on

முன்னாள் தமிழக அமைச்சர் கக்கனின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு,  தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் தமிழக அமைச்சர் கக்கனின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி போல்டன்புரம் கக்கன்பூங்கா அருகே அமைந்துள்ள கக்கன்ஜி திருஉருவச் சிலைக்கு, தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், மண்டல தலைவர்கள் சேகர், ஐசன்சில்வா, செந்தூர்பாண்டி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதின், அமைப்புசாரா மாவட்ட தலைவர் நிர்மல்கிறிஸ்டோபர், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலெட்சுமி, மகிளா மண்டல தலைவி சாந்தி, மாவட்ட துணை தலைவர்கள் தனபால், சின்னகாளை, காமாட்சி தனபால், மாவட்ட செயலாளர்கள் கோபால், ஜுட்சன், அழகுவேல், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன், வார்டு தலைவர்கள் மைக்கேல் பிரபாகர், முத்துராஜ், முனியசாமி, கிருஷ்ணன்,த னுஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

அமைச்சர் கீதா ஜீவன் வீடு முற்றுகை - பாஜக எச்சரிக்கை!

எட்டயபுரத்தில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

  • Share on