தூத்துக்குடியில் பாஜக மாநிலத் துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் கண்ணாடிகள் அடித்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பி & டி காலனி 8 வது தெருவில், முன்னாள் எம்பியும் பாஜக மாநிலத் துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா வீடு உள்ளது. இந்த நிலையில், இன்று (22.12.2022 ) பிற்பகல் அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடி, பூந்தோட்டி மற்றும் கார் கண்ணாடி உள்ளிட்டவைகளை சிலர் அடித்து உடைத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும், பாஜக நிர்வாகிகளும் வீட்டின் முன் கூடி வருவதால் அப்பகுதி பரபரப்பாக கானப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் நேற்று கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா பேசும்போது, எங்கள் தலைவர் அண்ணாமலை பேசினால் மேடையில் ஏறி தாக்குவோம் என்று கூறிய, உங்களது கால் மற்றும் நாக்கை வெட்டுவோம் என்றும், அண்ணாமலை இருக்கும் மேடையில் நீங்கள் ஏற நினைத்தால், வீட்டில் இருந்தே கிளம்ப முடியாது என்றும் இதோடு நிறுத்தி கொள்ளுங்கள்" என்றும் திமுக மற்றும் அமைச்சர் கீதாஜீவனுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை சசிகலா புஷ்பா எச்சரிக்கும் விதமாக பேசினார்.
இந்த நிலையில், இன்று சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் கண்ணாடிகள் அடித்து சேதப்படுத்தியிருப்பது குறிப்பிடதக்கது.