• vilasalnews@gmail.com

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்!

  • Share on

மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டம் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டம் மாப்பிள்ளையூரணியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

இக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசுகையில்:-

மாப்பிள்ளையூரணி ஊராட்சி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி, அரசின் திட்டங்கள் அனைத்தும் நம் ஊராட்சி பகுதிக்கு முழுமையாக கிடைத்திட பணியாற்றி வருகிறது. அதே போல், சுகாதாரம், குடிதண்ணீர், சாலை, மின்விளக்கு, புதிய குடிநீர் குழாய் அமைத்தல் போன்ற அடிப்படை பணிகளை மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஊராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கிறது. 

நம்பகுதியில் ஒவ்வொரு குடும்பத்தினரும், தேவையற்ற குப்பைகளையும் நெகிழிகளையும் சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் தூய்மை காவலர்களிடம் வழங்க வேண்டும். முதன்மை ஊராட்சியாக விளங்குவதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் தேவை அதை மக்களாகிய நீங்கள் துணை நிற்க வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றி கொடுக்கப்படும். உங்களுக்காக தொடர்ந்து மாப்பிள்ளiயூரணி ஊராட்சி நிர்வாகம் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று பேசினார்.

கூட்டத்தில் 2023ம் ஆண்டிற்கு கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயார் செய்வது குறித்து சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் துணைத் தலைவர் தமிழ்ச் செல்வி, உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், ஜீனத்பீவி, பாரதிராஜா, பாலம்மாள், தங்கப்பாண்டி, சக்திவேல், ராணி, வசந்தகுமாரி, பாண்டியம்மாள், கதிர்வேல், அருள் மிக்கேல் ஸ்டாலின், உமா மகேஸ்வரி, தங்கமாரிமுத்து, ஜேசுராஜா, பெலிக்ஸ், சமூக ஆர்வலர்கள் சசி, தொம்மை, திமுக மாவட்ட பிரதிநிதி தர்மலிங்கம், திமுக கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர்கள் ராமசந்திரன், கணேசன், தெற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, முன்னாள் ஊராட்சி உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் ஜெஸிந்தா, கௌதம் உள்பட பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

  • Share on

தூத்துக்குடியில் பணத்திற்காக 5 மாத குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது - 5 மாத குழந்தை மீட்பு!

தூத்துக்குடியில் பாஜக மாநிலத் துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு, கார் கண்ணாடிகள் அடித்து சேதம்!

  • Share on