மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அவசரக் கூட்டம் தலைவர் சரவணக்குமார் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் சேரும் குப்பைகளை அகற்ற கூடுதல் டிராக்டர் நடை, வாடகை உயர்த்தித்தர மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோருவது குறித்து தலைவர் சரவணக்குமார் தலைமையில் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து ஆலோசணை செய்தனர்.
மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேரும் குப்பைகளை அகற்றும் பணிக்கு தினசரி மூன்று டிராக்டர் வாகனங்கள் மூலம், ஒரு நாளைக்கு 1 டிராக்டருக்கு 4 நடை வீதம் 3 டிராக்டர்களில் 12 நடைகள் மூலம் குப்பைகள் அகற்றப்படுகிறது. அதற்காக ஒரு நடைக்கு டிராக்டர் வாடகை ரூ.800 வீதம் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், தற்போது டீசல் விலை, வண்டி வாடகை, கூலி போன்றவைகளில் உயர்வால் தேவைக்கு ஏற்ப டிராக்டர்களை பயன்படுத்த முடியாமல் இப்பகுதிகளில் சேரும் குப்பைகளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டு வருகின்றது. இதனால் சுகாதார சீர்கேடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சணைகள் ஏற்ப்படாமல் தடுக்கவும், ஊராட்சி பகுதிகளை தொடர்ந்து சுத்தமாக பராமரிக்கவும்,
ஒரு நாளைக்கு குப்பை அள்ளும் டிராக்டர் நடையை 20 நடையாக உயர்த்தியும், ஒரு நடைக்கு டிராக்டர் வாடகையை ரூ.1200- ஆக உயர்த்தி தர மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுவது என இந்த அவசர கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் துணைத் தலைவர் தமிழ்ச் செல்வி, உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், ஜீனத்பீவி, பாரதிராஜா, பாலம்மாள், தங்கப்பாண்டி, சக்திவேல், ராணி, வசந்தகுமாரி, பாண்டியம்மாள், கதிர்வேல், அருள் மிக்கேல் ஸ்டாலின், உமா மகேஸ்வரி, தங்கமாரிமுத்து, ஜேசுராஜா, பெலிக்ஸ், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.