விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரி பகுதியில், புதிய தமிழகம் கட்சியின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் வெள்ளி விழா சிறப்பு மாநாடு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் முன்தினம் இரவு நடைபெற்றது.
மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான புதிய தமிழகம் கட்சியின் தொண்டர்கள் வருகை தந்து கலந்து கொண்டனர். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆயிரக்கணக்கான கட்சியினர் சென்று மாநாட்டில் கலந்து கொண்டனர்.
அம்மாநாட்டில், தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பாக, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ், கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு வெள்ளியிலான மகுடம் சூட்டப்பட்டு, வெற்றி வேலினை வழங்கி சிறப்பித்தார். இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.