தூத்துக்குடியில் வரும் 21ஆம் தேதி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் கிறிஸ்மஸ் விழா நடக்கிறது. இதில் ஆயிரம் கிறிஸ்தவ குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வழங்குகிறார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனையின் பேரில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மிகப்பெரிய அளவில் தூத்துக்குடியில் வரும் 21ஆம் தேதி மாலை புதன்கிழமை விவிடி சிக்னல் அருகில் கிறிஸ்மஸ் விழா இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு, மெகா நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள ஆயிரம் கிறிஸ்தவ குடும்பங்களுக்கு சேலை, வேட்டி, தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
இவ்விழாவில் சிறுபான்மை அணி மாநில செயலாளர் அசோகன் வரவேற்று பேசுகிறார். மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் வாரியார் விழாவை ஒருங்கிணைக்கிறார். பாஜக சட்டசபை குழு தலைவர் நைனார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, மீனவரணி மாநில தலைவர் முன்னாள் எம்எல்ஏ முனுசாமி, சிறுபான்மை அணி மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா மற்றும் மாநில, மாவட்ட, சிறுபான்மை அணி நிர்வாகிகள் மீனவரணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் சின்னத்தம்பி நன்றி கூறுகிறார்.
விழா ஏற்பாடுகளை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தலைமையில், துணைத் தலைவர் வழக்கறிஞர் வாரியார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.