விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு மேற்கொண்டாா்.
விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை அலுவலகம் மற்றும் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் முக்கிய வழக்கு கோப்புகளையும், ஆவணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று (15.12.2022) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு, உதவி ஆய்வாளர் மகாலிங்கம், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம்,
நாகஜோதி உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.