• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே கண்டெய்னர் லாரியில் புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக கடத்திய 5 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடி அருகே கண்டெய்னர் லாரியில் புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக கடத்திய 5 பேரை கைது செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு)  ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் மகாராஜன் மற்றும் வடபாகம் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் மகாலிங்கம், தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் செந்தில்குமார்,  திருமணிராஜன் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் இன்று (15.12.2022) முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் நேசமணிநகர் சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருசக்கர வாகனம் மற்றும் கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் முத்தையாபுரம், முள்ளக்காடு, கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த கோமதிவேல் மகன் கணேசன் (56), கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்களான கிருஷ்ணப்பா மகன் மகேஷ் (28), பிலிங்கா மகன் அருண்குமார் (23), கோபி நாயக் மகன் சதீஷ் நாயக் (23) மற்றும் ஆனந்த் நாயக் மகன் சஷாங்க் நாயக் (20) ஆகிய 5 பேரும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக இருசக்கர வாகனம் மற்றும் கண்டெய்னர் லாரியில் கடத்தி வந்தது தெரியவந்தது.

உடனே மேற்படி தனிப்படை போலீசார்  கணேசன், மகேஷ் அருண்குமார், சதீஷ் நாயக் மற்றும் சஷாங்க் நாயக் ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 1,04,280 மதிப்பிலான 134 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ரொக்க பணம் ரூபாய் ஒரு லட்சம், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

காட்டுப் பன்றிகளால் பயிர்கள் சேதமாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கோரிக்கை!

விளாத்திகுளம் காவல் நிலையத்தில் எஸ்பி., ஆய்வு

  • Share on