• vilasalnews@gmail.com

காட்டுப் பன்றிகளால் பயிர்கள் சேதமாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கோரிக்கை!

  • Share on

கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதியில் காட்டு பன்றிகளால் பல ஆயிரக்கணக்கான ஹெக்டரில் பயிரிடப்பட்டிருந்த  பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புகள் குறித்து அரசுக்கு எடுத்துக் கூறி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :-

தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தார், கோவில்பட்டி, புதூர் - விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களில் மானாவாரி மற்றும் கிணற்றுப்பாசனம் மூலமாக பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களில் மக்காச்சோளம், கம்பு, உளுந்து, பாசிப்பயறு, எள், பருத்தி, ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. அதில் விளையும் தருவாயில் உள்ள மக்காச்சோளம், பயறு வகைப்பயிர்களை மான்கள் மற்றும் பன்றிகள் இரவு நேரங்களில் அதிகமான சேதங்களை ஏற்படுத்தி முற்றிலும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நான் 15.12.2022 அன்று கயத்தார் வட்டம் சவலாப்பேரி கிராமத்தில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டேன். உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர்  உரிய கருத்துருவை அரசின் கவனத்திற்கு அனுப்பி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.

மேலும், ஒவ்வொரு ஏக்கர் நிலத்திலும் சுமார் ரூ.40,000 வரை இழப்பிடு ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். என அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய ஒன்றியக் குழு கூட்டம் - தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது!

தூத்துக்குடி அருகே கண்டெய்னர் லாரியில் புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக கடத்திய 5 பேர் கைது!

  • Share on