ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக கூட்ட அரங்கில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், ஒன்றிய குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்தும், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம், ஒன்றியக்குழு துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.