தைப்பூச இருமுடி விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூருக்கு தூத்துக்குடி மாவட்ட செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.
மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச இருமுடி விழா டிசம்பர் 23ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. தைப்பூச இருமுடி விழாவில் கலந்துகொள்ள தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்களில் இருந்து செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டிச்செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது.
சக்தி மாலை அணியும் நிகழ்ச்சியை கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைவர் சக்திமுருகன் தொடங்கிவைத்தார்.
கோவில்பட்டி, தூத்துக்குடி, மந்திதோப்பு, இளையரசனேந்தல், கழுகுமலை, விளாத்திகுளம், நாகலாபுரம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், கடம்பூர், புதூர், முத்துசாமிபுரம், எட்டையபுரம், பிள்ளையார்நத்தம் உட்பட மாவட்டம் முழுவதும் சக்தி மாலை அணியும் நிகழ்ச்சி தொடங்கியது.
சக்தி மாலை இருமுடிகட்டிச் செல்லவிரும்பும் பக்தர்கள் தங்களுக்கு அருகில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் / சக்தி பீடங்களை தொடர்புகொள்ளலாம். இருமுடி பக்தர்களின் வசதிக்காக அதிவேக இரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்ல தெற்கு இரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க துணைத்தலைவர் பண்டார முருகன், செயலாளர் செந்தில் சுப்ரமணியன், பொருளாளர் கண்ணன், மகளிர் அணி பத்மாவதி, வேள்விக்குழு கிருஷ்ண நீலா, இளைஞர் அணி செல்லத்துரை, பிரச்சாரம் முத்தையா, கோவில்பட்டி மன்ற தலைவர்கள் அப்பாசாமி, செல்வி, ராஜ், ராமசாமி, வட்ட தலைவர்கள் பால்ச்சாமி, செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.