• vilasalnews@gmail.com

கோவில்பட்டி அருகே 10 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு - தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

  • Share on

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

 தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலுப்பையூரணி தாமஸ்நகர் பகுதியை சேர்ந்த ஞானமுத்து மகன் சண்முகராஜ் (52) என்பவர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை கடந்த 2019 ஆண்டு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து  சண்முகராஜ் என்பவரை கைது செய்தனர்.

இவ்வழக்கை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி புலன் விசாரணை செய்து கடந்த 28.02.2019 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சாமிநாதன் இன்று (15.12.2022) குற்றவாளியான சண்முகராஜ் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் மகேஸ்வரி ஆகியோரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  பாராட்டினார்.

  • Share on

திருச்செந்தூரில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை - மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் துவக்கி வைத்தார்!

மேல்மருவத்தூரில் தைப்பூச இருமுடி விழா: செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதம் தொடக்கம்

  • Share on