• vilasalnews@gmail.com

திருச்செந்தூரில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை - மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் துவக்கி வைத்தார்!

  • Share on

திருச்செந்தூரில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் துவக்கி வைத்தார். 

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணி உள்ளிட்ட அனைத்து அணியினரும் திமுகவின் சாதனைகளை வீடுதோறும் எடுத்துச் சென்று மக்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதே போல் மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் விளையாட்டு துறை மற்றும் சிறப்பு செயலாக்கத் திட்ட துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அதிகளவில் உறுப்பினர் சேர்க்கையை இளைஞரணியில் சேர்க்க வேண்டும். 2024ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலின் போது இளைஞரணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும். உண்மையாக உழைப்பவர்களுக்கு உரிய அங்கிகாரம் தக்க சமயத்தில் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். 

அதன் அடிப்படையில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனையின்படி, திருச்செந்தூரில் பல்வேறு இடங்களில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்றது வருகிறது. 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக இல்லம் தோறும் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் திருச்செந்தூர் 6வது வார்டு பகுதியில் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் கலந்து கொண்டு இல்லம் தோறும் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமினை தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் அப்பகுதியை சார்ந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று திமுக உறுப்பினர் படிவங்களை பெற்று, திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நகர திமுக செயலாளர் வாள் சுடலை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணல்மேடு சுதாகர், நகர  இளைஞரணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன் உள்பட இளைஞரணியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 20ம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து!

கோவில்பட்டி அருகே 10 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு - தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

  • Share on