• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 20ம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 20ம் தேதி (செவ்வாய்க்கிழமை) குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்பு கார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகின்ற வருகிற 20ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. எனவே  பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு - எஸ்.பி., அறிவிப்பு

திருச்செந்தூரில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை - மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் துவக்கி வைத்தார்!

  • Share on