• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு - எஸ்.பி., அறிவிப்பு

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 35 ஆண்கள் 6 பெண்கள் என 41 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்ப தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 18 வயதுக்கு குறையாமலும் 45 வயதுக்கு மிகாமலும் இருப்பவர்களாகவும் சேவை மனப்பான்மையுடனும், தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்களாகவும், எவ்வித குற்ற பின்னணி இல்லாதவராகவும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இத்தேர்வு வருகிற 21.12.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கவாத்து மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.

மேற்படி தேர்வில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்கள் கல்வி, வயது நிரூபண அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையை முழுமையாக ஒழிக்க நேரடியாக களத்தில் இறங்கிய எஸ்.பி!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 20ம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து!

  • Share on