• vilasalnews@gmail.com

புதிய தமிழகம் கட்சி வெள்ளிவிழா மாநாடு : தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 500 வாகனங்களில் செல்கின்றனர்!

  • Share on

புதிய தமிழகம் கட்சியின் வெள்ளிவிழா மாநாட்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 500 வாகனங்களில் நிர்வாகிகள் செல்ல உள்ளதாக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாதாவது: 

புதிய தமிழகம் கட்சியின் 25-வது ஆண்டு நிறைவு வெள்ளிவிழா சிறப்பு மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (15-ந்தேதி) நடைபெறுகிறது. மாநாட்டிற்கு நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி சிறப்புரை யாற்றி பேசுகிறார். ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் மாநாடு திருப்பு முனையாக அமையும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெறும். 

தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சிக்கு செல்வாக்கு உள்ள நிலையில் தென்மாவட்டங்களில் கட்சிக்கு பெரும் எழுச்சி கிடைத்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகி களும், தொண்டர்களும் கலந்து கொள்கிறார்கள். வெள்ளி விழா மாநாட்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 500 வாகனங்களில் நிர்வாகிகள் செல்ல உள்ளனர். எனவே அதில் மாவட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் குடும்பத்துடன் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Share on

புதியம்புத்தூரில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையை முழுமையாக ஒழிக்க நேரடியாக களத்தில் இறங்கிய எஸ்.பி!

  • Share on