• vilasalnews@gmail.com

புதியம்புத்தூரில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

  • Share on

புதியம்புத்தூரில் திமுக அரசைக் கண்டித்து ஓட்டப்பிடாரம் ஒன்றிய அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக தலைமையிலான தமிழக அரசைக் கண்டித்து வரும் 9, 13 மற்றும் 14-ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, திமுக அரசின் 18 மாத கால ஆட்சியில்,சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் செயல்களில் மட்டுமே தொடர்ந்து ஈடுபட்டு வரும் திமுக அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் ஓட்டப்பிடாரம் தாலுகா, புதியம்புத்தூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மோகன், கிழக்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் யூனியன்  சேர்மனுமான காந்தி  காமாட்சி ஆகியோர் தலைமையில், புதியம்புத்தூர்  நகரச் செயலாளர் ஆறுமுகசாமி முன்னிலையில் நடைபெற்றது. 

இதில், ஓட்டப்பிடாரம் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பொன்ராஜ், ஒன்றிய பொருளாளர் அய்யப்பன், துணைச் செயலாளர் முருகேசன், ஆதிலிங்கம், வழக்கறிஞர் அணி பரமசிவன், இளைஞர் அணி சின்னத்துரை, தகவல் தொழில் நுட்ப அணி ராஜேஷ்குமார், அதிமுக நிர்வாகி தங்கவேல் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

  • Share on

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை - தீர்ப்பை வரவேற்று திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சி!

புதிய தமிழகம் கட்சி வெள்ளிவிழா மாநாடு : தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 500 வாகனங்களில் செல்கின்றனர்!

  • Share on