சாயர்புரம் டாக்டர் ஜி.யு.போப் பொறியியல் கல்லூரியில், இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கீழ் செயல்படும் தூத்துக்குடி மாவட்டம் நேரு யுவகேந்திரா மற்றும் நாட்டு நல பணித்திட்டம் சார்பாக இளைஞர்களின் தனித் திறன்கள் பதிவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தில் உள்ள டாக்டர் ஜி.யு.போப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் தன்னார்வலர் செயற்கை திட்டத்தின் மூலம் இளைஞர்களின் தனித் திறன்கள் பதிவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இசக்கி மற்றும் ஏகம்பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் முகாமை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு துறை தலைவர் டாக்டர் விஜயலட்சுமி இயந்திரவியல் துறை தலைவர் கனிசெல்வன், கட்டிடக்கலைத்துறை தலைவர் ஜாக்சன் உடற்கல்வி இயக்குனர் கிறிஸ்டோபர் ஜாஸ்பர், எபனேசர் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நல பணி திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் டென்னிசன் செய்திருந்தார்.