
தூத்துக்குடி மேலூர் பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை ஆராதனையுடன் கொடைவிழா வரிஏடு வைபவம் நடைபெற்றது.
இந்துசமய அறநிலைத் துறைக்குட்பட்ட தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் உடனுறை பாகம்பிரியாள் நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்ட, கிராமதேவதை மேலூர் பத்திரகாளியம்மன் திருக்கோவில் தை மாத கொடைவிழாவை யொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரது அறிவுரையின் படி, கனிமொழி எம்.பி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோரது வழிகாட்டுதலின்படி, மேலூர் பத்திரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை ஆராதனையுடன் வரிஏடு போடுதல் வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கோவில் விழாக்குழு தலைவர் கீதா செல்வமாரியப்பன், துணைத்தலைவர்கள் கோபால், சக்திவேல், குழு உறுப்பினர்கள் கவுன்சிலர் சுரேஷ்குமார், மாரிமுத்து, செந்தில்குமரன், கந்தசாமி, ராமசந்திரன், கோமதிநாயகம், ராஜசேகர், முன்னாள் அறங்காவலகுழு உறுப்பினர் அறிவழகன், மற்றும் முருகன் யாதவ், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.