தூத்துக்குடியில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற, காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணியை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை பள்ளி கல்வித்துறை மற்றும் தேசிய பசுமை படை சார்பில் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கொடியை சேர்த்து துவக்கி வைத்தார்.
இதில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையர் (பொறுப்பு) சரவணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகரன், மாநகராட்சி ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி, நகர ஒருங்கிணைப்பாளர் அருள் சகாயம், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல் ராஜ், மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.