தூத்துக்குடியில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக தலைமையிலான தமிழக அரசைக் கண்டித்து வரும் 9, 13 மற்றும் 14-ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, திமுக அரசின் 18 மாத கால ஆட்சியில்,சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் செயல்களில் மட்டுமே தொடர்ந்து ஈடுபட்டு வரும் திமுக அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முக நாதன் தலைமையில், முன்னாள் அமைச்சரும் மாநில அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், அமைப்பு செயலாளர் சின்னத்துரை ஆகியோர் முன்னிலையில் இன்று ( டிச.,13 ) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஹென்றி, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஒன்றியச் செயலாளர் காசிராஜன், யூனியன் சேர்மன் வசந்தாமணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் சந்தனம், செரினா, மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வீரபாகு, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் வலசை வெயிலுமுத்து, மாமன்ற எதிர்கட்சி கொறடா வழக்கறிஞர் மந்திர மூர்த்தி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், முருகன், முன்னாள் துணை மேயர் சேவியர், சார்பு அணி செயலாளர்கள் வழக்கறிஞர் சேகர், நடராஜன், விக்னேஷ், தனராஜ், பிரபாகர், அருண்ஜெபக்குமார், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல செயலாளர் கல்விக்குமார், நகர செயலாளர்கள் மகேந்திரன், பேரூராட்சி செயலாளர்கள் காசிராஜன், ரவிச்சந்திரன், வேதமாணிக்கம், துரைச்சாமி ராஜா, அசோக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யாலெட்சுமணன், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் கோமதிமணிகண்டன், ஆண்ட்ருமணி, பிள்ளைவிநாயகம், முனியசாமி, செங்குட்டுவன், சரவணபெருமாள், முத்துக்கணி, மனுவேல்ராஜ், பிராங்கிளின் ஜோஸ், ரமேஷ்கிருஷ்ணன், ஆறுமுகம், லெட்சுமணன், பெருமாள், மாநகராட்சி கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி, பத்மாவதி, செண்பகசெல்வன், ஜெயராணி, முன்னாள் கவுன்சிலர்கள் சுடலைமணி, தவசிவேல், சந்தனப்பட்டு, பெரியசாமி, பொன்ராஜ், மனோகர், நிர்வாகிகள் டைகர் சிவா, மைதீன், சுரேஷ், தலைமை பேச்சாளர் முருகானந்தம், நிர்வாகிகள் மாரியப்பன், விஜயன், செல்லப்பா, மகாராஜன், பிரபாகரன், பாண்டி, வட்ட செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், சந்திரசேகர், டேவிட் ஏசுவடியான், ராமச்சந்திரன், சுயம்பு, முருகன், பாக்கியராஜ், கொம்பையா, வெங்கடேஷ், அருண்ஜெயக்குமார், அருண்ராஜா, மணிகண்டன், நௌசாத், ஜெயக்குமார், ஈஸ்வரன், அந்தோணிராஜ், பூர்ணசந்திரன், செல்வராஜ், கண்ணையா, மகளிர்கள் ராஜேஸ்வரி, ஸ்மைலா, பானுமதி, பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ்;, தலைமை பேச்சாளர் கருணாநிதி, வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவாபாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ராஜாராம், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் ஞானபுஷ்பம், முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் ஞான்ராஜ், மாவட்ட தலைவி சாந்தா, பிரதிநிதி ஜான்சிராணி, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார். சகாயராஜ், தமிழரசி, மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர் அன்புலிங்கம், வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ராஜா, அருண்குமார், துரைசிங், அந்தோனி ராஜ், சிறுபான்மை பிரிவு அசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், முன்னாள் வட்ட செயலாளர்கள் கெய்னஸ், அன்புலிங்கம், கோட்டாளமுத்து, ஜெகதீசன், கருப்பசாமி, சகாயராஜ், சங்கர், ஹரிகிருஷ்ணன், அசோக், சீனிவாசன், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், சங்கர், பெலிக்ஸ், சண்முகராஜ், கருப்பசாமி, முருகன், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், முத்துக்குமார், ராஜ்குமார், சுடலை முத்து, மற்றும் ஸ்டாலின், முருகேசன், மனோகர், மகாராஜன், சேவியர், ஆறுமுகம், மணிகண்டன், அந்தோனி ராஜ், சித்திரைவேல், கண்ணன், சிவசாமி, பெருமாள், பொன்ராஜ், ஆறுமுகநயினார், சுப்புராஜ். சிவகுமார், நவநீதன், முருகராஜ், கிளை செயலாளர்கள் மாரிமுத்து, ஜெய்கணேஷ், முனியசாமி, ஓட்டுனர் அணி ராஜா, மகளிர் அணியினர் சுப்புலட்சுமி, துரைச்சி, ஜீவா, சாந்தா, மாரியம்மாள், சந்தன ஜோதி, கற்பகம், மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.