• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் - தமாக கூட்டத்தில் முடிவு!

  • Share on

தமிழகத்தில் மின்சார கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தூத்துக்குடியில் நடந்த தமாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் தமாக தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின்சார கட்டணம், பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயிறு ஆகியவைகளுக்கு இன்சூரன்ஸ் வழங்க வேண்டும். புதூர் பகுதிகளில் மக்காச்சோளம், கம்பு, பயிர் வகைகளை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தமாக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற ஆலோசனை கூட்டம் : ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது!

தூத்துக்குடியில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

  • Share on