• vilasalnews@gmail.com

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற ஆலோசனை கூட்டம் : ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது!

  • Share on

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற ஆலோசனை கூட்டம் வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் ஊராட்சி மகேஸ்வரி முன்னிலையில், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசுகையில்:-

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படியும், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படியும் நடைபெறுகின்ற இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கணக்கெடுக்கும் பணியை துவக்குவது, அதற்கு அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் தங்களது பகுதிகளில் கணகெடுக்கும் பணியாளர்களுக்கு முழு ஓத்துழைப்பு வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் மாப்பிள்ளையூரணி சிறந்த ஊராட்சியாக விளங்குவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்செல்வி, உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், ஜீனத்பீவி, பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலிக்ஸ், தங்கபாண்டி, ராணி, சக்திவேல், ஸ்டாலின், பாலம்மாள், வசந்தகுமாரி, உமாமகேஸ்வரி, ஜேசுராஜா, பாண்டியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் அமலதாசன், மற்றும் ஆரோக்கிய மேரி, தர்மலிங்கம், ஆனந்தகுமார், ராமசந்திரன், கௌதம், மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

  • Share on

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்!

தூத்துக்குடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் - தமாக கூட்டத்தில் முடிவு!

  • Share on