• vilasalnews@gmail.com

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்!

  • Share on

கர்ப்பிணி பெண்களுக்கு  ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி, புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ( டிச., 10 ) காலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் வசுமதி அம்பா சங்கர் வரவேற்புரையாற்றினார்.

மீன் வளம்,  மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, நூறு கப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி விழா பேருரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற்ச்செல்வன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பிரம்ம சக்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், நாகராஜ்,  முன்னாள் மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் ஊராட்சி ஓன்றிய குழு தலைவரும் கூட்டுறவு வங்கி தலைவருமான விபிஆர் சுரேஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், பாலமுருகன், சுதாகர், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம்,  தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட கவன்சிலர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகப்பாண்டியன், செந்தில், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், சுரேஷ்காந்தி, ராமசாமி, இசக்கிபாண்டியன், மாணவரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பேரின்பராஜ் லாசரஸ், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, துணை அமைப்பாளர் ஆறுமுகம், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரகுராமன், பூங்குமார், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், கோபால், நெல்சன், நாகராஜன், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபால கிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பால்ராஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோனிதனுஷ்பாலன், முத்துமாலை, வழக்கறிஞர் கிருபாகரன், கபடிகந்தன், கப்பிகுளம் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வஉசி சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  • Share on

தூத்துக்குடியில் ஒரே நாளில் 3 கடை பூட்டை உடைத்து தொடர் திருட்டு - 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது!

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற ஆலோசனை கூட்டம் : ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது!

  • Share on