தூத்துக்குடியில், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியாகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தியின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் வ.உ.சி தமிழ் சாலையில் தபசு மண்டலம் அருகில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, ஆரோக்கியபுரத்தில் உள்ள தொழுநோய் மருத்துவ மனையில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ், மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், செந்தூர்பாண்டி, மாவட்ட துண தலைவர்கள் விஜயராஜ், அருணாசலம், பிரபாகரன், ஜெபராஜ், சின்னகாளை, மாவட்ட பொதுசெயலாளர் மைக்கேல், மாவட்ட செயலாளர்கள் கோபால், ஜெயகிங்ஸ்டன், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், மாவட்ட அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், வார்டு தலைவர்கள் மகாலிங்கம், தனுஷ், விஸ்வநாதன், முத்துவேல், முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.