தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் பழைய கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றும் முகாம் வருகிற 28ம் தேதி நடைபெற உள்ளது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து கிழிந்த மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாமினை வருகிற 28ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள பிரதான கிளையில் வைத்து நடைபெற உள்ளது. இதில் வியாபாரிகள், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தங்களிடம் உள்ள பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கொடுத்து புதிய நோட்டுக்களை பெற்று பயன்பெறலாம் என கிளை மேலாளர் மகேஸ் தெரிவித்துள்ளார்.