சொத்து வரி, மின் கட்டண உயர்வை திரும்பெற வலியுறுத்தி எட்டயபுரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக அரசின் 18 மாத ஆட்சியில், சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அதிமுக பேச்சாளர் கருணாநிதி, 15ஆவது வார்டு கவுன்சிலர் அய்யம்மாள் உட்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தியும், காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஏற்பாடுகளை எட்டயபுரம் நகர செயலாளர் ராஜ்குமார் செய்திருந்தார்.