தூத்துக்குடி நிலா சீ புட்ஸ் தொழிற்சாலையில், பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தடைச் சட்டம் விழிப்புணர்வு முகாம் மற்றும் புகார் பெட்டி தொடக்க விழா நடைபெற்றது.
பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம், 2013 நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் உள்ள நிலா சீ புட்ஸ் தொழிற்சாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, நிலா சீ புட்ஸ் நிர்வாக இயக்குநர் செல்வின் பிரபு ஆகியோர் வரவேற்புரையாற்றினர். மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், வழக்கறிஞர் சொர்ண லதா ஆகியோர் பணியிடத்தில் பாலியல் வன்முறை குறித்து கருத்துரையாற்றினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் புகார் தெரிவிப்பதற்காக புகார் பெட்டியை அமைத்து தொடங்கி வைத்தார்.
இதில், நிலா சீ புட்ஸ் இயக்குனர் அமிநாத் பிரபு , பொதுமேலாளர் சோமன் ராய், மனித வளத்துறை அதிகாரி ஜெயசீலன், மக்கள் தொடர்பு அதிகாரி நிலா ராஜமணி மற்றும் நிலா சீ புட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் பணியாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.