• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் டிச.,12ம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்!

  • Share on

தூத்துக்குடியில் வருகிற டிசம்பர் 12ம் தேதி தமிழ்மாநில காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக வடக்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் கதிர்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- 

வருகிற டிசம்பர் 12ம் தேதி திங்கள்கிழமை காலை 11மணிக்கு தூத்துக்குடி பீச்ரோட்டில் மீன்பிடி  துறைமுகத்திற்கு எதிரே அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் வைத்து வடக்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், தமிழ்மாநில காங்கிரசின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன் பிறந்த தின விழா கொண்டாட்டம், தமிழக அரசின் மக்களை வாட்டி வதைக்கும் மின்சாரக் கட்டணம், பால் விலைஉயர்வு, ரேசனில் தரமற்ற அரிசி வழங்குதல், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்காசோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு முறைப்படி இன்சூரன்ஸ் வழங்க கோரியும், விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்களை அரசு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துதல் உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

நீதிமன்ற உத்தரவு போன்று போலியாக ஆவணம் தயார் செய்து மோசடி - 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை!

தூத்துக்குடியில் பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தடைச் சட்டம் விழிப்புணர்வு முகாம்!

  • Share on