இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருவதை வரவேற்று கொண்டாடும் வகையில், தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இமாச்சல பிரதேசத்தில் 68 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 12-ல் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்தநிலையில் இன்று இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்த சூழலில் நண்பகல் நிலவரப்படி இமாச்சலபிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையாக 40 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருவதை வரவேற்று கொண்டாடும் வகையில்,
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் வ.உ.சி சாலை தபசு மண்டபம் முன்பு பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் அருள், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ், மண்டல தலைவர்கள் செந்தூர்பாண்டி, ராஜன், சேகர், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், கந்தசாமி, மாவட்ட துணை தலைவர்கள் அருணாச்சலம், விஜயராஜ், ஜெபராஜ், மார்க்கஸ், சின்னகாளை, மாவட்ட செயலாளர் கோபால், சேவியர்மிஷியர், வார்டு தலைவர்கள் தனுஷ், மகாலிங்கம், எட்வர்ட், ஜேக்கப், உள்பட பலர் கலந்து கொண்டனர்.