தூத்துக்குடியில் வரும் 10ம் தேதி சனிக்கிழமை மில்லர்புரத்தில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ள பல்துறை இலவச சிறப்பு மருத்துவ முகாமை கனிமொழி எம்பி துவங்கி வைக்கிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ குழுமங்களில் ஒன்றான சென்னை வடபழனி போர்டிஸ் மருத்துவமனை நடத்தும் பல்துறை இலவச சிறப்பு மருத்துவ முகாம் வரும் 10ம் தேதி சனிக்கிழமை தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில், போர்டிஸ் மருத்துவமனை இயக்குநர் வெங்கட பணிதர் நெல்லூரி வரவேற்புரையாற்றுகிறார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமானை கீதாஜீவன், ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமை வகித்து மருத்துவ முகாமை துவக்கி வைக்கிறார். மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவக்குமார், சுகாதார துறை துணை இயக்குநர்கள் பொற்செல்வன், பாஸ்கோ ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
மருத்துவ முகாமில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை நோய், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், இருதய நோய் சிகிச்சை, மூட்டு வலி, முதுகு வலி, இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்டவைகளுக்கான இலவச சிறப்பு சிகிச்சை மற்றும் பரிசோதனை நடைபெறுகிறது.
மருத்துவம் தொடர்பான முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு முகாம் ஒருங்கிணைப்பாளர் அய்யனார் பெருமாள் (9688086641) என்பவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.